625.500.560.350.160.300.053.800.900.160.90 (3)பாரிய ஆபரணக் கொள்கையுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புறக்கோட்டை நகையகம் ஒன்றிலிருந்து பாரியளவில் நகைகளை கொள்ளையிட்ட உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான கும்பலொன்று நகையகத்தை கொள்ளையிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகரும் மற்றுமொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலன்பிந்துனுவௌ என்னும் இடத்தில் இரகசியமாக பதுங்கியிருந்த வேளையில் குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment