வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை துர்க்கை அம்மன் வீதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான அற்புதராஜா பிரசாந்தி என்பவரே இவ்வாறு இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment