625.500.560.350.160.300.053.800.900.160.90 (4)களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை ஒன்றில் போலி நாணயத்தாளுடன் மதுபான கொள்வனவுக்கு வந்த இரண்டுபேரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவாதாவது,

பல காலமாக எமது மதுபான சாலையில் போலி நாணையத்தாள்களை தந்து மதுபானத்தை கொள்வனவு செய்து செல்கின்றனர்.

நாங்கள் 20000 (இருபதாயிரம்) ரூபாய்க்கு மேற்பட்ட நாணயத்தாளகளை கிழித்து எறிந்துள்ளோம். எனவே இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருந்தோம்.

வழமைபோன்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது முச்சக்கர வண்டியில் மூவர் வந்தனர்.

அதில் இரண்டு பேர் இறங்கி வந்து 5000 (ஐந்தாயிரம்) ரூபாய் நாணயத்தாள் ஒன்றினை தந்து மதுபானம் கேட்டனர்.

அந்த நாணயத் தாளில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது, பரிசோதித்தோம். போலிநாணயத்தாள் விடயம் தெரியவந்தது.

பின்னர் இருவரும் ஓட எத்தணித்தனர். மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தோம். முச்சக்கரவண்டியில் இருந்தவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிக்கப்பட்ட இருவரும் காத்தான்குடியைச் சோர்ந்த இருபத்தைந்து வயது மதிக்கத்தக்கவர்கள் என உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்நெடுக்கப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

Comments

comments, Login your facebook to comment