தலைமன்னாருக்கு மேற்கு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயற்சித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் மீனவர்கள் போல் தங்களை அடையாளம் காட்டி, இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் சிலாவத்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் கூறியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் தங்கமும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment