studentவவுனியா நகரப்பகுதியை அண்டி அமைந்துள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தம்மிடம் பாடசாலையில் கற்கும் மாணவர்களை தாம் கற்பிக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்டதாக நகரப்பகுதியில் அமைந்துள்ள சில பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களிலும் கற்பிக்கின்றனர். இவர்கள் தமது பாடசாலை மாணவர்களை தம்மிடமே தனியார் கல்வி நிலையததிற்கு வருகை தந்து கற்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும், மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்மிடம் மாணவர்களை அனுப்பி வைக்குமாறு கோருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆசிரியர்களிடம் கல்வி நிலையம் செல்லாவிட்டால் பாடசாலையில் மாணவர்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தால் தாம் மாணவர்களை குறித்த ஆசிரியரிடமே அனுப்ப வேண்டியுள்ளதாகவும், வெளியில் சொன்னால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ன அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேற்று வீழ்ச்சிக்கு இதுவும் ஒருகாரணம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment