மாத்தறை-மாலிம்பட பிரதேசத்தில் செங்கல் குழியில் வீழ்ந்து குழந்தை ஒன்று நேற்று(08) உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு மூன்று வயது எனவும் வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருக்கும் போதே செங்கல் குழியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குழந்தை வீட்டில் இல்லாததால் பெற்றோர் அவரை தேடியுள்ள நிலையில், இந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments

comments, Login your facebook to comment