625.500.560.350.160.300.053.800.900.160.90பலகை கடத்தலில் ஈடுப்பட்ட நபரை பாதுகாத்த குற்றத்திற்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை (இன்ஸ்பெக்டர்) பெல்மடுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கு நியமனம் வழங்குமாறு பொலிஸ் தலைமையக அதிகாரியினால் இரத்தினபுரி பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த நபர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பின்னர், இவரது நியமனத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து செய்தி வந்துள்ளதாக குறித்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரிகளின் கவனம் குறித்து இந்த விடயத்தில் கற்றுக் கொள்ளலாம் என குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment