IMG_0867சிறப்புரிமை பிரச்சினை ஒன்றினை எழுப்புவதற்கு அவைத் தலைவர் அனுமதி கொடுக்காமையினால்வடமாகாண சபையின் 65ம் அமர்விலும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்செங்கோலை தூக்குவதற்கு முயற்சித்துள்ள நிலையில், சக மாகாணசபை உறு ப்பினர்கள்அவ்வாறு செய்ய வேண்டாம். என கேட்டதற்கு அமைய சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்குவதைதவிர்த்துள்ளார்.

யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துதெரிவித்துக் கொண்டிருக்கையில், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் சபையில் பேசிகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நீங்கள் பேசுவதுஊடகங்களில் வரும் என கூறினார்.

அதனையடுத்து ஊடகம் ஒன்றில் வெளியான செய்திதொடர்பாக தாம் சிறப்புரிமை பிரச்சினையை சபையில் எழுப்பவுள்ளதாக சிவாஜிலிங்கம் சபையில் கூறினார்.

எனினும் இந்தஅமர்வில் அதற்கு அனுமதிக்காது என அவைத் தலைவர் கூறவே சிவாஜிலிங்கம் அவைத் தலைவருக்கு முன்பாக சென்று செங்கோலை தூக்க முயன்றதுடன், சற்றே தரக்குறைவானவார்த்தைகளை இருவரும் பயன்படுத்தினர்.

பின்னர் சக மாகாணசபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்குவதை தவிர்த்தார்.

இந்நிலையில் உனக்கு என்ற வார்த்தைசிவாஜிலிங்கத்தை நோக்கி தாம் பயன்படுத்தியமைக்கு வருத்தம் தெரிவித்த அவைத் தலைவர்சீ.வி.கே.சிவஞானம் அந்த வசனத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.

Comments

comments, Login your facebook to comment