roadமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இன்று (செவ்வாய்க் கிழமை) சம்பவித்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் சந்தியில் டிப்பர் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மோதியதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த பெண் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment