625.500.560.350.160.300.053.800.900.160.90மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பகுதியில் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடமாடிய நபர் ஒருவருக்கு 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாய சேவையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பகுதியில் பொலிசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு திங்கள்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து குறித்த நபருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனையும் 6000 ரூபா தண்டப்பணமும் 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாய சேவையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment