625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் செயலாளராகத் குணசீலன் காஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகளும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண தலைமைச் செயலர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இரண்டு நீதிபதிகள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் ஒருவர் இந்தக் குழுவில் உள்ளனர். இந்தக் குழுவின் செயலாளராகவே குணசீலன் காஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இல. 63 நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தலைமைச் செயலர் அலுவலகத்திலேயே மேற்படி விசாரணைக் குழுவின் அலுவலகம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவுக்கு, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுக்களைக் கடந்த வியாழக்கிழமை கையளிப்பதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் வடக்கு மாகாணத் தலைமைச் செயலர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தார்.

குழு செயற்பட ஆரம்பிக்காததால் அவற்றை அவர் கையளிக்கவில்லை. இதன் பின்னரே இந்தக் குழு உத்தியோகபூர்வமாகச் செயற்பட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment