ARREST_2540291b-720x480இராணுவ பெண் மேஜர் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறித்த நபர் ஒருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்திரிகையில் பிரசுரமான திருமண விளம்பரம் ஒன்றின் ஊடாக அறிமுகமான நபர் ஒருவர், பெண் இராணுவ மேஜர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

சுமார் 98000 ரூபா பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை கந்தேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தம்மை ஒரு பொறியியலாளர் என அடையாளப்படுத்தி திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, பெண் இராணுவ மேஜரை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனமொன்றுக்காக குத்தகை செலுத்த உள்ளதாகத் தெரிவித்து பணம் பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் இந்த நபர் குறித்து சந்தேகம் எழுந்து விசாரணை செய்த போது குறித்த நபர் எந்தவொரு தொழிலிலும் ஈடுபடவில்லை என்பதனை பெண் இராணுவ மேஜர் கண்டறிந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண் இராணுவ மேஜர் சம்பவம் குறித்து பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment