625.500.560.350.160.300.053.800.900.160.90யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.

சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பல்கலைக்கழக இளைஞன், யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கோரியுள்ளார்.

எனினும் அதற்கு குறித்த யுவதியின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் நேற்று மாலை ஐவருடன் வெள்ளை வானில் குறித்த இளைஞன் தந்தையை தாக்கி விட்டு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடத்திச் செல்லப்பட்ட யுவதி குறித்து இதுவரையில் எவ்விதமான தகவல்களும் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment