625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)இலங்கையில் இணைய வசதியினை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் கூகுள் இணைய பலூன் வசதியினை ஏற்படுத்தவுள்ள நிலையில் தொலைத்தொடர்பு இணைய சேவைகள் மீதான தீர்வை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது.

தொலைத்தொடர்புகள் மற்றும் இணைய சேவைகளுக்கான தீர்வை வரி 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிம்(SIM) அட்டையை செயற்ப்படுத்துவதற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment