1495652190CHildபாணந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் இல்லமொன்றிலிருந்த சிறுவனொருவன் நேற்றுப் புதன்கிழமை தப்பியோடியுள்ளதாகப் பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீகாதென்னப் பகுதியைச் சேர்ந்த, தினேஸ் சத்துரங்க என்ற 17 வயதுடைய இச் சிறுவன், நீதிமன்றமொன்றின் கட்டளையூடாகவே குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி உயரமுடைய இச் சிறுவன், தப்பியோடிய வேளையில் சிவப்பு நிற ரிசேர்ட்டும் பச்சை நிறக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சிறுவரைக் கட்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment