முல்லைத்தீவு துணுக்காய் ஐயன்கன்குளத்தில் 2011இல் திறந்து வைக்கப்பட்ட சந்தை இயங்காத நிலையில் காணப்படுகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீனால் இச்சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

200 குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் மக்களின் கோரிக்கைக்கு அமைய சந்தை திறந்து வைக்கப்பட்டது. அயற் கிராமங்களான பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய கிராமங்களின் மக்கள் இச்சந்தையினை பயன்படுத்துவார்கள் என திறந்து வைக்கப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து சந்தை இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.FotorCreated-49

Comments

comments, Login your facebook to comment