வவுனியா லக்சபான வீதியில்  11.11.2016 இன்று காலை 12.30மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் நபர் ஒருவரிடமிருந்து சிறிய ரக ஒலிச்சாதனம் ( music box) ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.அதனை இன்று (11.11.2016) திருத்துவதற்காக கழற்றிய போது அதனுள் கைக்குண்டு இருந்தமையினை அவதானித்த உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

எனினும் இதுவரை சம்பவ இடத்திற்கு பொலிசார் விரையவில்லை

DSC_0377DSC_0378 DSC_0380 DSC_0383 DSC_0384 DSC_0385 DSC_0386 DSC_0390 DSC_0391 DSC_0392

Comments

comments, Login your facebook to comment