019வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்லை நீர்தேக்கத்தில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை மஹாவலி மஹா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் தனது நண்பர் ஒருவருடன்    மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர்.

பொல்கொல்லை நீர் தேக்க அனைக்கு கீழ் பகுதியில் மூன்று பேரும் நீராடியுள்ளனர்.

இதன்போது  ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட போது, மற்றுமொரு நபர் காப்பாற்றச் சென்ற போதே இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் மாலை 4 மணியளவில் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நிபுன் மதுசங்க (16) மற்றும் நிவந்;த நயனஜித் (16)  என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment