625.500.560.350.160.300.053.800.900.160.90நீர்கொழும்பில் சர்வதேச பாடசாலையொன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் சாரதி ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிட்டுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்காவிலிருந்து நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் சந்தேக நபரின் வாகனத்தில் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமியை வாகனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் கூறியுள்ளதை தொடர்ந்து சிறுமியின் பாட்டி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் நீதி மன்றில் முன்னிலை படுத்திய போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவதான் உத்தரவிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment