625.500.560.350.160.300.053.800.900.160.90இனந்தெரியாத தாதிமார்கள் இருவரால் போடப்பட்ட தடுப்பூசியின் பின்னர் இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று ராஜாங்கனை – யாய 8 – ஶ்ரீ ராஹுல வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , அன்றைய தினம் பாடசாலையினுள் இவ்வாறான தடுப்பூசி போடும் செயற்திட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாணவிகள் பாடசாலையின் தரம் 3ல் கல்வி கற்கும் மாணவிகளாவர்.

இவர்கள் தற்போதைய நிலையில் , ராஜாங்கனை – யாய பிரதேச மருத்துவமனையிலும் மற்றுமொருவர் தம்புத்தேகம ஆரம்ப மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் , ராஜாங்கனை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி நலிந்த தேசப்பிரியவிடம் எமது செய்திப்பிரிவு வினவிய நிலையில் , அவ்வாறான தடுப்பூசி செயற்திட்டமொன்றை ஏற்பாடு செய்யவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

Comments

comments, Login your facebook to comment