DSC_0481வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கையில் இன்று (12.11.2016) மாலை 5.00மணியளவில் வீட்டினுள் புகுந்த நாகபாம்பு பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கையில் வசிக்கு இந்து சமயத்தினை சேர்ந்தவரின் இல்லத்தில் இன்று நாகபாம்பு ஒன்று வீட்டில் வளர்த்துவந்த வளர்ப்பு நாயை கடித்து நாய் இறந்துள்ளது. இதனையடுத்து வீட்டார் இறந்த நாயினை நிலத்தினை வெட்டித்தாட்டுள்ளனர். அதன் பின்னர் வீட்டிக்குள் நூழைந்த சமயத்தில் வெள்ளை நிற நாகப்பாம்பு ஒன்று வீட்டினுள் இருந்தமையினை அவதானித்த உரிமையாளர் உடனடியாக சென்று அயலவர் , பொலிசாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் பொலிசாரின் உதவியுடன் 4மணித்தியாள போராட்டத்தின் பின்னர் குறித்த பாம்பை மடக்கி பிடித்து பம்பைமடு காட்டிக்கு எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த வீட்டார் அன்மீகத்தில் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.DSC_0470DSC_0472 DSC_0474 DSC_0476 DSC_0481 DSC_0489 DSC_0490 DSC_0497 DSC_0499

 

Comments

comments, Login your facebook to comment