625.500.560.350.160.300.053.800.900.160.90திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

12.11.2016 காலை 9.00மணி முதல் 12.30 மணிவரை தாதியர் உத்தியோகத்தரொருவர் வைத்தியரொருவரினால் நோயாளர்களுக்கு முன்னிலையில் ஏசியமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இரத்தம் பரிசோதனை செய்வதற்காக வைத்தியர் வழங்கியதாக ஏதும் எழுதப்படாத நிலையில் நோயாளரொருவர் பற்றுச்சீட்டொன்றை கொண்டு வந்த போது ஊசி போடும் அறையிலிருந்த தாதியர் இந்த பற்றுச்சீட்டை கொடுத்து பற்றுச்சீட்டு வழங்கிய வைத்தியரிடம் சென்று விபரத்தினை எழுதிவிட்டு வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வைத்தியரினால் வெளிநோயாளர் பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி தாதியரை பேசியதாகவும் தெரியவருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக இரு சங்கங்களைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பணிப்பாளரை சந்திக்க சென்ற போது தன்னை தாதியர்கள் சந்திக்க தேவையில்லையென மறுத்துள்ளார்.

இதனை கண்டித்தே ஜக்கிய தாதியர் சங்கம், அரசாங்க தாதியர் சங்கம் ஆகிய இரு சங்கங்களைச்சேர்ந்த தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை நோயாளர்கள் காலை முதல் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கொழும்பு சங்கங்களின் ஆலோசனையின் பேரில் திருகோணமலை சங்க உறுப்பினர்கள் பணிப்பாளர் மற்றும் ஏசிய வைத்தியர் மற்றும் வைத்திய நிபுணர்கள் அனைவரும் இனைந்து கலந்துறையாடியதையடுத்து பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்ததாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Comments

comments, Login your facebook to comment