sad-boyyஅரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தீர்வை வரி பணம் நிதி அமைச்சரின் தலையீடு காரணமாக இழக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சுங்க அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சுங்க பணிப்பாளர் நாயகம் சுலானந்த பெரேரா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOYOTA PRADO TRJ 150 ரக மோட்டார் வாகனங்கள் தீர்வை வரி கட்டணத்தை செலுத்தாமல், இறக்குமதி செய்யப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் இழக்க நேரிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த மோட்டார் வாகனங்களை போலியான தகவல்கள் சமர்ப்பித்து இறக்குதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வாகன இறக்குமதியினால் பாரிய அளவிலான வருமானம் ஒன்று இழக்கப்படும் என்பது உறுதியாகியதன் பின்னர் குறித்த மோட்டார் வாகனங்களை சுங்க பிரிவில் விடுவிக்காமல் இருப்பதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஒரு வருடம் பூர்த்தியடைந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி குறித்த வாகனங்களை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் சுங்க பிரிவு பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த காலப்பகுதி வரையிலும் இந்த மோசடி தொடர்பில் சுங்கபிரிவு அதிகாரியான எஸ்.கே.ஏ.எஸ் சேனாநாயக்க தலைமையில் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

2016 ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை சுங்க சேவை சங்கம் இந்த மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பிற்கான பதிலாக குறித்த சங்கத்தின் பிரதிநிதிகளை தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். அந்த சந்தர்ப்பம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் முடிவாக இந்த மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைக்குரிய மோசடியை கண்டுபிடித்த சுங்க அதிகாரிகள் அனைவரும் அந்த குழுவுக்கு முன் சாட்சி வழங்கியதன் பின்னர், உயர்மட்ட பிரபு ஒருவர் அந்த குழுவின் அறிக்கை வெளியாகுவதற்கு முன்னர் குழுவை கலைத்துள்ளார். அவ்வாறான சூழலில் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சுங்க பணிப்பாளர் நாயகம் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக விசேட ஒழுக்காற்று விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த மோட்டார் வாகனம் தொடர்பிலான தகவல்கள் சுங்க பிரிவிற்கு வெளியே சென்றமையினால் சுங்க திணைக்களத்தின் மீது தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதென அதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment