625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)எமது நாட்டிலே எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி ஒரு நாளைக்கு 60 பேர் சிகரெட் பாவனையால் இறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சிகரெட் பாவனையால் இறக்கின்றனர், என உடுவில் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பொன். சந்திரவேல் தெரிவித்தார்.

சுன்னாகம் பொதுநூலக தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு “போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வு இன்று யாழ்.மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவத்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு வருடத்தில் இலங்கையில் முப்பதாயிரத்திற்கும், நாற்பதாயிரத்திற்கும் இடைப்பட்ட மரணங்கள் போதைப் பொருள் பாவனையால் இடம்பெறுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் போதைப் பொருள் கூடிய பாவனையுள்ள மாவட்டமாக எமது யாழ். மாவட்டம் கணிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியதொரு விடயமாகும்.

இந்த நாட்டில் போதை பழக்கம் காரணமாக எத்தனையோ தனி மனிதர்களும், சமூகமும் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றது. இத்தகைய பாதிப்பிலிருந்து இந்த சமூகத்தை விடுவிப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஒரு கூட்டு முயற்சியாக இந்த வேலைத் திட்டத்தை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

உண்மையில் சமூக மாற்றம் என்பது நாம் உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதொன்றல்ல. சமூக மாற்றத்தைப் படிப்படியாகத் தான் ஏற்படுத்த முடியும். அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியிருக்கிறது.

போதைப் பொருட்கள் என்று சொல்லும் போது சிகரெட், மதுபானம் உட்பட போதை ஏற்படுத்தக் கூடிய பல பொருட்கள் காணப்படுகின்றன. அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்க வேண்டுமெனில் சமூக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

முதலில் போதைப் பொருட்களுக்கு எதிரான உணர்வுகள் ஊட்டப்படுவதுடன் அதுவே பின்னர் விழிப்புணர்வாக மாற்றப்பட வேண்டும்.

இத்தகைய விழிப்புணர்வுகள் மூலம் பல குடும்பங்களை போதையின் தாக்கத்திலிருந்து விடுவிக்க முடியும். எனவும் சந்திரவேல் தெரிவித்தார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment