625.472.560.320.505.600.053.800.900.160.100மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் நேற்று கடுமையான இனவாதத்தினை கக்கியதோடு, கடும் போக்கான வார்த்தைகளையும் பிரயோகித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.

அண்மையில் அவருடைய அட்டகாசம் ஒரு படி முன்னேறி பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி தற்போது பரவி வருகின்றது.

பிக்கு விகாராதிபதியாக உள்ள விகாரைக்கு விசாரணை நடத்தச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது அவதூறான வார்த்தைகளையும் கூறி திட்டியதோடு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

“தமிழர்களுக்கு நாடு சென்று விட்டது, எனக்கு அதிகாரம் செய்ய நீ யார், உன்னை என்ன செய்வேன் எனத் தெரியாது…. அத்தோடு பல ஊடக நலத்திற்காக எழுத முடியாத வார்த்தைகள், அனைத்தையும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட சுற்றியிருந்தவர்கள் மீதும் பிரயோகித்து திட்டியுள்ளார் தேரர்.

இங்கு அவரை தடுக்க பொலிஸார் தமது அதிகாரத்தை பிரயோகிக்கவோ, அல்லது முறையான கட்டுப்படுத்தலையோ மேற்கொள்ளவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment