625.0.560.320.160.600.053.800.668.160.90யாழ்ப்பாணத்தில் குப்பைகள் அகற்றப்படாமையால் நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புச் செய்துள்ளதுள்ள நிலையில், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்மா நகரசபை அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 7ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதோடு, இப்போராட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7 வருடங்களாக பணியாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராட்டமும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

தற்போது மழை காலம் நடைபெறுவதாலும், குப்பைகள் அகற்றப்படாமையாலும் யாழ் நகரம் முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம் நிரம்பிவழிவதால் மக்களின் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தூர இடங்களிலிருந்து பயணம் செய்யும் பயணிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்திதுள்ளதுடன், பேருந்து நிலையத்தில் மாணவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் குப்பைகள் நிறைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment