DSC_1154முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டுயானைகளை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் பழையமுறிகண்டி ஐயன்கன்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிர் செய்கைகள் அழிக்கப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் கேட்டபோது குறித்த காட்டுயானைகளின் தொல்லை தொடர்பிலான முறைப்பாடுகள் இடைக்கப் பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி அதனூடாக காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்;கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment