mattala-rajapksa-airport_mini1மத்தள விமான நிலையத்தின் ஊடான சேவையை 45 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.

2017 அம் ஆண்டு ஜனவரி முதல் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில்  கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆகையினால்  குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டு மாற்றீடாக மத்தள  விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை 45 சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை 50 மில்லியன் அமெரிக் டொலர் செலவில்  புனரமைக்கப்பட உள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மூடப்படுகின்ற விமான நிலையத்தை  எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக மூடி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள  அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment