DSC08851முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பழம்பாசி ஒதியமலை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரக் குற்றிகளை ஒட்டுசுட்டான் பொலிசார் இன்று(14) கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் வெட்டப்பட்ட 10 முதிரை மரக் குற்றிகளை பொலிசார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் வெட்டப்படுகின்றதாக பொலிஸ் நிலையத்தில் பதிவாகிய முறைப்பாட்டிற்கமைவாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் சந்தேக நபர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment