முள்ளியவளை ஓட்டுசுட்டான் வீதியில் இன்றுமாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியில் குறுக்காக சென்ற மாட்டுடன் மோதுண்டு இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.விபத்தில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டை சேர்ந்த தாயும் சிறு வயது மகளும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.15049816_1179142735456964_1853373389_n FotorCreated-124

Comments

comments, Login your facebook to comment