கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் திம்புள்ள ஸ்டோனிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ரஞ்சன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment