downloadமோதல் சம்பவமொன்றை தடுக்கும் வகையில் யுவதி ஒருவரின் ஆடைகளை களைந்த நிர்வாணப்படுத்திய சம்பவமொன்று ரம்புக்கன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

யுவதியின் தந்தை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டதாக அம்பலமானதனைத் தொடர்ந்து, யுவதி அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது குறித்த பெண்ணின் உறவினர், யுவதியை தாக்கியுள்ளார்.

யுவதியின் தாயும் யுவதியை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன் போது அயலவர் ஒருவர் வந்து யுவதியை காப்பாற்றும் போர்வையில், யுவதியின் எல்லா ஆடைகளையும் களைந்துள்ளார்.

மேலும் யுவதியின் உடலை அநாகரீகமான முறையில் ஸ்பரிசம் செய்து தப்பிச் சென்றுள்ளார்.

நபர் ஒருவர் தம்மை தாக்கிய போது அருகாமையில் இருந்த மற்றுமொருவர் தம்மை காப்பாற்றும் போர்வையில், ஆடைகளை களைந்து தப்பிச் சென்றதாக யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த யுவதி கேகாலை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment