download (1)_1முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரத்தில் குடிநீர்த் திட்டத்துக்கான வேலைகள் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் வாரத்தில் இருந்து குடிநீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக துணுக்காய் பிரதேச சபை அறிவித்துள்ளது.

‘குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் தேவையினை நிறைவு செய்யும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இறுதிக்கட்ட பணிகள் நிறைவுப் பெற்றதுடன் குடிநீர் விநியோகம் ஆரம்பமாகும்’ என தெரிவிக்கப்படுகின்றது.

துணுக்காயின் அமைதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம், கல்விளான், உயிலங்குளம், ஆலங்குளம் ஆகிய கிராமங்களும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வரட்சியான காலங்களில் துணுக்காய் பிரதேச சபையினரால் குடிநீர் வநியோகம் மேற்கொள்வது வழமையாகும்.

Comments

comments, Login your facebook to comment