மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் கிரான் எனுமிடத்தில் இன்று(15) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய வயோதிபத் தம்பதியினரில் கணவன் இறந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, தங்களது பேரப்பிள்ளையின் பூப்படைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோராவெளி கிராமத்திலிருந்து கோரகல்லிமடு கிராமத்திற்கு வயோதிபத் தம்பதியினர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வாகனமொன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த விபத்தில் சைக்கிளைச் செலுத்தி வந்த எஸ்.கந்தையா(72) என்பவர் இறந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தது.

படுகாயங்களுக்குள்ளான அவரது மனைவி சந்திரசேகரி தங்கமணி(68) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment