பம்பலப்பிட்டி பகுதியில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வேன் ஒன்றில் வைத்து கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவரே ஈடுப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 28 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், மின்னேரியா, உடவளவ மற்றும் குண்டசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment