அண்மையில், பாடாசாலை மாணவிகள் இருவருக்கு இனம் தெரியாத தாதியர்களால் பலவந்தமான முறையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது என்ற கருத்து வெளிவந்திருந்தது.

இந்த தகவல் முற்றிலும் பொய் என தம்புத்தேகம ஆதார வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி கூறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும் கடந்த 10 ஆம் திகதி பாடசாலை முடித்து வீடு சென்றடைந்த பின்னர் மயங்கி விழுந்தார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அதே தினத்தில் இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விடயம் தொடர்பில் 7 வயது மாணவி, இருவருக்கும் வயதானவர் ஒருவர் தான் ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளதாகவும் அதை தான் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு தாதியர்கள் ஒரு பையில் ஊசியை எடுத்து வந்து தங்களுக்கு செலுத்தினார்கள் என பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் பாடசாலையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஊசி செலுத்திய பெண் பஞ்சுகள் கொடுத்ததாக மாணவிகள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் பஞ்சுகளை சோதனைக்கு உட்படுத்திய போது இரத்தம் இருப்பதற்கு எந்த தடயமும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊசி இல்லாமல் syringe மூலம் குறித்த மாணவர்கள் பயமுறுத்தப்பட்டுள்ளனர்கள் என பொலிஸார் சந்தேகிப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment