கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்த இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த முன்னாள் விளையாட்டு ஆலோசகர் தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையினால் மரண தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை மனைவியின் சடலத்தை மறைக்க முற்பட்டமைக்காக ஏழு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டதுடன் அபராதப் பணமாக ரூபா 5 ஆயிரம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment