ஹயஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரினால் நேற்று (15) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சாவை வவுனியா பொலிஸார் ஹயஸ் ரக சொகுசு வாகனம் ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாதகல் பகுதியில் இருந்து கொழும்பு கொச்சிக்கடைப் பகுதிக்குச் வாகனத்தை வவுனியா, ஏ9 வீதி, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் மறித்து சோதனை செய்த போதே வாகனத்தில் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும், அதில் பயணித்த 8 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் வவுனியா பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த இரு மாதங்களுக்குள் யாழில் இருந்து வந்த நிலையில் பெருமளவான கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edit

Comments

comments, Login your facebook to comment