பதவியேற்று இரண்டு ஆண்டு பூர்த்தியை மிக எளிமையாக கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஜனாதிபதி பதவியை மைத்திரிபால சிறிசேன அடுத்தாண்டு தை மாதம் 8ம் திகதியோடு இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றார்.

இந்நிலையில் தேவையற்ற முறையிலான விழாக்களோ அன்றி நிகழ்ச்சிகளோ தேவையில்லை என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

இந்த முடிவை அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தினத்தில் 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களையும், மக்களுக்கு மிகவும் பயனுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர் சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருவதாகவும், அதனை முறியடித்து நாட்டையும், தன்னுடைய ஆட்சியையும் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டிய பணிகளில் ஜனாதிபதி ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் தேவையற்ற, ஆடம்பரமான நிகழ்வுகள் இப்பொழுது அவசியமில்லை என ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Comments

comments, Login your facebook to comment