மட்டக்களப்பில் இன்றைய தினம்; நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த தனியார் காணிக்குள் அத்துமீறி நுளைந்த மங்களராமய விகாராதிபதியை பொலீஸ் அதிகாரிகள் கைது செய்யாது வேடிக்கை பார்த்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் கரடியணாறு பொலீஸ் அதிகாரிக்கு குறித்த காணிக்குள் அத்துமீறி நுளைவதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தும் அதனை மீறி செயற்பட்ட மங்களராமய விகாராதிபதியின் அச்சுறுத்தல்களை கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன் அவருடன் சமரசத்தில் ஈடுபட்டமை இந்த நாட்டில் பௌத்த துரவிகளுக்கு ஒரு சட்டம் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது.

கரடியனாறு பொலிசாரின் முறைப்பாட்டிற்கு அமைய 2016.11.16 ம் திகதி குறிப்பிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் மங்களராமய விகாராதிபதி ஈடுபடவுள்ளதாகவும் இதனால் குறித்த பிரதேசத்தில் இன வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி வீதியில் ஊர்வலமாக வருவதற்கு, வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் மேற்படி தனியார் காணிக்குள் அத்துமீறி செல்ல, அக்காணியில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான வேலைகளைச் செய்வதற்கும் அல்லது சின்னம் மற்றும் மரம் நடுவதற்கு, கூட்டம் நடத்துவதற்கும் 1979ம் ஆண்டு 15ம் இலக்க இலங்கை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை 106(1) பிரிவின் கீழ் நீதிமன்றில் நேற்று பொலிஸாரினால் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதனை மீறிச் செயற்பட்டால் குறித்த விகாராதிபதியை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தும். பொலிஸ் அதிகாரிகள் விகாராதிபதியை கைது செய்யாது குறித்த பிரதேசத்திற்குள் உரிமையாளர் உட்பட யாரும் நுளையக்கூடாது என கூறியதுடன், அங்குள்ள கற்கள் உட்பட எதையும் உரிமையாளர் எடுக்கக் கூடாது எனவும் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

எனவே இந்த நல்லாட்டியிலும் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் என்கின்ற நிலை தொடர்கிறது என்கின்றனர் பொதுமக்கள்

Comments

comments, Login your facebook to comment