கேகாலை – றம்புக்கனை பிரதேசத்தில் பெண்ணொருவர் 12 ஆண்டுகளாக கணவனிடம் கடுமையான பாலியல் கொடுமையை எதிர்நோக்கி வந்துள்ளார்.

இந்த பாலியல் கொடுமைகளை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியாத பெண் றம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் பெண்ணின் கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கை விசாரித்த கேகாலை மேல் நீதிமன்றம் குறித்த நபருக்கு கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

42 வயதான நபருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபர் பின்னவலை பிரதேசத்தில் கட்டடம் கட்டும் தொழிலாளியாக பணியாற்றிய போது பல்வேறு போதைப் பொருள்களுக்கு அடிமையாகியவர் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் 37 வயதானவர் என்பதுடன் அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

10 வயதான மகளும், 9 வயதான மகனும், 6 வயதான மகளும் இருக்கின்றனர். இவர்கள் பாடசாலையில் பயின்று வருகின்றனர்.

12 ஆண்டுகள் தொடர்ந்த இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என குறித்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment