யாழ் – கல்லுண்டாய் வெளி பிரதேசத்தில் இன்று மாலை (16) பாரிய வெட்டுக்காயங்களுடன் வீதியில் துடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த வாள் வெட்டு சம்பவமானது இன்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வீதியில் துடித்துக்கொண்டிருந்த நபரை . பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பாக மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment