நாட்டுக்குள் 3.2 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களை கடத்த முயற்சித்த ஜோடியை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த ஜோடி இன்று (17) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும்,அவர்களின் பயணப் பொதிகளிலிருந்து 381 சிகரெட் பைக்கற்றுக்கள் மீட்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் ரூபா 25 ஆயிரம் அபராதப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment