துப்பாக்கி முனையில் வர்த்தக நிலையமொன்றில் கொள்ளையிட்ட மர்ம நபர்களை பெண் ஒருவர் அடித்து விரட்டிய துணிகர சம்பவம் ஒன்று இன்று (17) இடம்பெற்றுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தில் உள்ள நவீன பல்பொருள் அங்காடியில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

இதன் போது சூப்பர் மார்க்கட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபா பணம் அவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் பின்னர் சூப்பர் மார்க்கட் பெண் பணியாளரின் காதில் இருந்த தங்கக் காதணியை துப்பாக்கி முனையில் பறித்தெடுக்க கொள்ளையர் ஒருவர் முயன்றுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் பணியாளர் கொள்ளையன் கையில் துப்பாக்கி இருப்பதை கண்டும் அச்சப்படாமல் அவனைப் புரட்டி எடுத்துள்ளார்.

அந்தப் பெண்ணை அச்சுறுத்திய கொள்ளையர்கள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதும் அவர் அச்சமின்றி தனது தாக்குதலைத் தொடர்ந்துள்ளார்.

இந்த சந்தடியில் இன்னொரு ஊழியரும் கொள்ளையன் ஒருவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்களுக்கு தகுந்த பாடம் புகட்டிய குறித்த பெண் பணியாளர் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் தெரிய வந்துள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment