04-1457109801-murderwoman-600x360இரா­ணு­வத்தின் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை ஆலோ­சகர் ஒருவர், தனது கர்ப்­பிணி மனை­வியைக் கொலை செய்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்றம் நேற்று இவ்­வாறு தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் உயி­ரி­ழந்­த­வரின் சட­லத்தை மறைக்க முயற்­சித்தார் என்ற

குற்றச்­சாட்டும் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு ஏழு வரு­டங்கள் கடூ­ழிய சிறைத்­ தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஒரு தினத்தில் இவர் கர்ப்­பி­ணி­யான தனது மனை­வியை தாக்கி கெலை செய்து புதைத்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட இவர் மீது அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.

இது தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வ­டைந்தநிலையில் நேற்று அநுராதபுரம் மேல்நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment