625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதினெட்டாம் கட்டை கொழும்பு பிரதான வீதியில் இன்று (17) அதிகாலை மாட்டு வண்டியும் பேருந்தும் விபத்துக்குள்ளானதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மாட்டு வண்டி உரிமையாளர் பலத்த காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு மாடுகளும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் மற்றும் மாட்டு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை வழியாக ஏறாவூரை நோக்கி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பஸ் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏறாவூர் ஐயங்கேணி, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த சின்னலெவ்வை வெள்ளத்தம்பி (வயது 61) என்பவரே சம்பவத்தி்ல காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

Comments

comments, Login your facebook to comment