625.0.560.320.160.600.053.800.668.160.90 (9)முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(17) திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் முல்லைத்தீவு நகர் மற்றும் கரையோர கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தற்காலிக வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் குழந்தைகளையும் முதியோர்களையும் பாதுகாப்பதில் கடும் சாவல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்து கடலில் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம், தற்போதைய மழை தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில் இது வழமையான பருவாகல மழையாகும். இந்த மழை காற்றுடன் இடைக்கிடை இவ்வாறு பெய்யக் கூடும்.

பொது மக்கள் வீடுகளில் உள்ள மரங்களின் பட்ட மரக் கொப்புகளை அகற்றுமாறும் வெளியான பிரதேசங்களில் நிற்பதை தவிர்க்கவும் என ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (10)

Comments

comments, Login your facebook to comment