625.500.560.350.160.300.053.800.900.160.90மாலைதீவில் உள்ள செல்வந்தர்களுக்கு பெண்களை அனுப்பி வைத்த 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நூற்றுக்கும் அதிகமான பெண்களை பாலியல் தொழிலுக்காக மாலைதீவிற்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றிரவு கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளது.

குறித்த பெண்களை சுற்றுலா விசாவில் மாலைதீவிற்கு அனுப்பிவைத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment