625.500.560.350.160.300.053.800.900.160.90வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த குழுவில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தலைமையில் இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

மேலும், சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே, ஹர்ஷ.டி.சில்வா, ரஞ்சன் ராமநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன,

கெஹலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, ஜே.சீ.அலவத்துவல, எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், அரவிந்தகுமார், நாலக்க பிரசாத் கொலொன்ன, சந்திம கமகே, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து நேசன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment