d3246eb8acb0e7876960d47defc805d4_1476778220-s-520x245வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவிலலை என குற்றம் சுமத்தத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வடக்கில் அண்மைய நாட்களாக கொலை, கொள்ளை, வாள் வெட்டு உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என்ற குழு ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் நாள்தோறும் கிடைக்கப்பெறுகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படும் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களாகவே இருக்கின்றனர். கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வேடிக்கையான விடயமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டித்து 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே உண்மை தெரியும் வரையில் அவர்கள் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனஅந்த அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment